72 - மேளகர்த்தா இராகங்கள்
தமிழில் பண்கள் என்பது கர்நாடக சங்கீதத்தில் இராகங்கள் என அழைகப்படுகிறது. இராகம் இரண்டு வகைப்படும் அவை தாய் இராகம், சேய் இராகம். தாய் இராகங்களாக 72 இராகங்கள் எடுத்து கொள்ளப்படுகிறது.இவற்றிலிருந்து தான் சேய் இராகம் பிறக்கிறது. தமிழிசை பண்களின் பிற்கால வளர்ச்சியே இந்த 72 - மேளகர்த்தா இராகங்கள் ஆகும். 72 -மேளகர்த்தா இராகங்களின் பிற்கால வளர்ச்சி மற்றும் மாற்றத்தினை பார்க்கும் பொழுது முதன் முதலில் 72 மேளகர்த்தா பெயர்களில் இராக அமைப்பினை உருவாக்கியவர் 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வெங்கிடமகி ஆவார்.சதுர்தண்டி பிரகாசிகை என்னும் நூலில் இதை குறிப்பிடுகிறார்.இருப்பினும் இந்த இராகங்களை விளக்கி அதில் கூறவில்லை. இதன் பிறகு 18-ம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட துளஜா மகாராஜா தனது சங்கீத சாரம் என்னும் நூலில் 72 - மேளகர்த்தா இராகங்களை குறிப்பிடுகிறார். இதில் தாய் இராகங்களுடன் சில சேய் இராகங்களும் இடம்பெற்றுள்ளன. பிறகு இதே 18 நூற்றாண்டில் வாழ்ந்த கோவிந்தாசாரியார் என்பவர் இவற்றில் இருந்த குறைகளை நிவர்த்தி செய்து ஒழுங்கான அமைப்பை கொண்ட 72 - மேளகர்த்தா இராகங்கள் முறையினை உருவாக்கினார்.இதன் அமைப்பு
ஜனக இராகங்கள் அல்லது தாய் இராகங்கள் 5 விதிகளைத் தழுவி அமைக்கப்பட்டுள்ளது.
அவை:
1.சம்பூர்ண ஆரோகணம் அவரோகணம் அல்லது ஏழுசுர ஏறுவரிசை இறங்கு வரிசை.
2.கிரம சம்பூர்ண அரோகண அவரோகணம் அல்லது வரிசைப்படியான ஏறு இறங்கு வரிசைகள்.
3.அரோகணத்தில் வரும் சுரத்தானங்களே அவரோகணத்திலும் வருதல்.
4.ஆரோகண அவரோகணம் அஷ்டகமாக அமைந்திருத்தல்.
5.மத்தியஸ்தாயி ஷட்ஜத்திலிருந்து மேல்ஸ்தாயி ஷட்ஜம் வரை சுரங்கள் ஒழுங்காகச் செல்லுதல்.
இந்த முறையினை தான் சங்கீத மும்மூர்த்தியில் ஒருவரான தியாகராஜர் பின்பற்றினார்.இந்த முறையினை தான் தற்போது அனைவராலும் வரை பின்பற்ற பட்டு வருகிறது . இருப்பினும் நாகஸ்வர வித்துவான் மதுரை பொன்னுசாமிப் பிள்ளை என்பவர் 72 என்பது சரியல்ல. மேளகர்த்தா என்பது 32 தான் என்று நன்கு நிறுவியிருக்கிறார்.
72 - மேளகர்த்தா இராகங்கள்
வரிசைப்படி
1.கனகாங்கி
2.ரத்னாங்கி
3.கானமூர்த்தி
4.வனஸ்பதி
5.மானவதி
6.தானரூபி
7.சேனாவதி
8.ஹனுமத்தோடி
9.தேனுகா
10.நாடகப்ரியா
11.கோகிலப்ரியா
12.ரூபவதி
13.காயகப்ரியா
14.வகுளாபரணம்
15.மாயாமாளவகெளளை
16.சக்ரவாகம்
17.சூர்யகாந்தம்
18.ஹாடகாம்பரி
19.ஜங்காரத்வனி
20.நடபைரவி
21.கீரவாணி
22.கரகரப்பிரியா
23.கெளரிமனோகரி
24.வருணப்ரியா
25.மாரரஞ்சனி
26.சாருகேசி
27.சரசாங்கி
28.அரிகாம்போதி
29.தீரசங்கராபரணம்
30.நாகநந்தினி
31.யாகப்ரியா
32.ராகவர்த்தினி
33.காங்கேயபூஷனி
34.வாகிதீஸ்வரி
35.சூலினி
36.சலநாட்டை
37.சாலகம்
38.ஜலார்ணவம்
39.ஜாலவராளி
40.நவநீதம்
41.பவானி
42.ரகுப்ரியா
43.கவாம்போதி
44.பவப்ரியா
45.சுபபந்துவராளி
46.ஷட்விதமார்க்கினி
47.சுவர்ணாங்கி
48.திவ்யமணி
49.தவளாம்பரி
50.நாமநாராயணி
51.காமவர்த்தினி
52.ராமப்ரியா
53.கமனஸ்ரம்
54.விஸ்வாம்பரி
55.ஸ்யாமளாங்கி
56.ஷண்முகப்ரியா
57.சிம்மேந்திரமத்யமம்
58.ஹேமவதி
59.தர்மவதி
60.நீதிமதி
61.காந்தாமணி
62.ரிஷபப்ரியா
63.லதாங்கி
64.வாசஸ்பதி
65.மேசகல்யாணி
66.சித்ராம்பரி
67.சூசரித்ரா
68.ஜோதிஸ்வரூபிணி
69.தாதுவர்த்தினி
70.நாசிகாபூஷணி
71.கோசலம்
72.ரஸிகப்ரியா
super
ReplyDelete